3 நாட்களில் ரூ.22 கோடி வசூல்… பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் ‘கட்டா குஸ்தி 2’!

34

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், உலகம் முழுவதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜூலை 3-ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று, வெளியான முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகமும், அதே கலகலப்பான பொழுதுபோக்கும், குடும்ப உணர்வுகளும், ஆக்ஷனும் இணைந்த திரைக்கதையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியின் திரை ரசாயனம் மீண்டும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், குழந்தை நட்சத்திரம் ஜாரா தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலுடன் இணைந்து விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

வசூல் மட்டுமின்றி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்தும் நேர்மறையான வரவேற்பைப் பெற்று வரும் ‘கட்டா குஸ்தி 2’, வரும் நாட்களிலும் பாக்ஸ் ஆபிஸில் தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.