துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ டிரெய்லர் வெளியீடு; ஆகஸ்ட் 20 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!

7

மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக உருவாகியுள்ள துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஐ ஆம் கேம்’ (I’m Game) திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்திலேயே மிகப் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள நிலையில், வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.

வெளியாகியுள்ள டிரெய்லர் தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கண்கவர் காட்சியமைப்புகள், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், அதிவேக சேஸ் சீக்வென்ஸ்கள் என இதற்கு முன் மலையாள சினிமாவில் அரிதாகக் காணப்பட்ட ஸ்டைலிஷ் ஃபேன்டஸி த்ரில்லர் அனுபவத்தை இப்படம் வழங்கும் என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது. குறிப்பாக, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத அளவுக்கு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் காட்சியளிப்பது டிரெய்லரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்அமைத்துள்ள பின்னணி இசை டிரெய்லருக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித்உருவாக்கியுள்ள காட்சியமைப்புகளும், அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ள அதிரடியான சண்டைக் காட்சிகளும் டிரெய்லரின் முக்கிய பலங்களாக அமைந்துள்ளன.

‘லோகா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘ஐ ஆம் கேம்’, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன்உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ‘RDX’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படமாகவும் இது உருவாகியுள்ளது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஐ ஆம் கேம்’, வரும் ஆகஸ்ட் 20 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.