நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி, இரண்டு மாணவர்களின் உயர்கல்விக்கான முழு கல்விச் செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது இந்த மனிதநேய செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகி ராஜசேகரன் அவர்களின் மகள் ஹரிஷிதாவின் இன்ஜினியரிங் படிப்பிற்கான முழு கல்விச் செலவையும் நடிகர் தனுஷ் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதேபோல், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகி தனசேகர் அவர்களின் மகள் ஸ்வேதாவின் மருத்துவக் கல்லூரி (எம்பிபிஎஸ்) படிப்பிற்கான முழு கல்விச் செலவையும் அவர் ஏற்று உதவி செய்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இரு குடும்பத்தினரையும் நேரில் வரவழைத்த நடிகர் தனுஷ், கல்விச் செலவிற்கான காசோலைகளை அவர்களிடம் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ரசிகர்களுடன் வெறும் திரை உறவைத் தாண்டி, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்திற்கும் துணை நிற்கும் வகையில் நடிகர் தனுஷ் மேற்கொண்டுள்ள இந்த உதவி, அவரது மனிதநேயத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தும் செயலாக பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

