‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடல் வெளியீடு… அனல் பறக்க விடும் சூர்யாவின் மாஸ் அவதாரம்!
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏற்கனவே வெளியாகி ஹிட்டான ‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘தி வெட்டிங் சாங்’ பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த புதிய பாடலும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
அதிரடியான இசை, துடிப்பான தாளம் மற்றும் மாஸ் நிறைந்த காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘தி ஒன் ரூல்’ பாடல், சூர்யாவை இதுவரை இல்லாத ஒரு புதிய சக்திவாய்ந்த அவதாரத்தில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. பாடல் முழுவதும் அவரது திரை ஆளுமை, உற்சாகம் மற்றும் கம்பீரம் வெளிப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடையே இது கொண்டாட்டப் பாடலாக மாறியுள்ளது.
இந்தப் பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவரது அதிரடி இசையுடன், பாடலாசிரியரும் பாடகருமான கானா காதர் எழுதி பாடியிருக்கும் இந்தப் பாடல், தனித்துவமான குரல் மற்றும் ஆற்றல்மிக்க வரிகளால் ரசிகர்களை உடனடியாக கவர்ந்துள்ளது.
‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திலிருந்து இதுவரை வெளியாகியுள்ள மூன்று பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இசை, காட்சியமைப்பு மற்றும் குடும்ப உணர்வுகளை இணைக்கும் வகையில் உருவாகி வரும் இந்தப் படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சூர்யதேவர நாக வம்ஷீமற்றும் சாயி சௌஜன்யா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் வழங்குகிறது. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.