சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிட்டார். ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த மோஷன் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் உருவாகவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.
வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சீமான் மற்றும் சாந்தனு பாக்யராஜின் தோற்றங்கள், பின்னணியில் இடம்பெற்றுள்ள மதுரை கோயில் கோபுரங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பு ஆகியவை படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. ‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பும், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 10-வது திரைப்படம் இது. தமிழ் திரையுலகில் தரமான வணிகப் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தயாரிப்பு நிறுவனம், கதைக்கும் வலுவான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு படங்களை உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படமும் கதைக்களம் மற்றும் தயாரிப்பு தரத்திற்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன், குடும்ப உணர்வுகள், ஆக்ஷன், கிரைம் மற்றும் எமோஷன் ஆகிய அம்சங்களை சரியான விகிதத்தில் கலந்து ரசிகர்களை கவரும் படைப்புகளை வழங்கியவர். ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனது தனித்துவமான பாணியை வெளிப்படுத்திய அவர், தற்போது அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தை உருவாக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுசீந்திரன் – சாந்தனு பாக்யராஜ் கூட்டணி, சீமானின் முக்கிய கதாபாத்திரம், சாம் சி எஸின் இசை மற்றும் மதுரை பின்னணியில் உருவாகும் கதைக்களம் என பல்வேறு அம்சங்கள் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளன.
மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள், நடிகர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான செய்திகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

